உலகிலேயே அதிக தொழிலாளர் சக்தியை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா (774 மில்லியன்) முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து இந்தியா சுமார் 608 மில்லியன் தொழிலாளர்களுடன் 2-ம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா (174+ மில்லியன்) மூன்றாம் இடத்தில் உள்ளது. முதல் 10 நாடுகளில் இந்தோனேசியா, நைஜீரியா, பிரேசில், பாகிஸ்தான், பங்களாதேஷ், ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கும். உலகின் மொத்த தொழிலாளர் படையில் 40%க்கும் அதிகமானோர் சீனா, இந்தியாவில் உள்ளனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.