கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை: ரஷ்யா தடாலடி

51பார்த்தது
கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை: ரஷ்யா தடாலடி
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா கூறியதை ரஷ்யா நிராகரித்துள்ளது. இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவுள்ளதாகவும், வெனிசுலாவில் இருந்து வாங்க உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து வந்த நிலையில், ரஷ்யாவின் இந்த பதிலால் குழப்பம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி