இந்தியா-கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையேயான 'காசிண்ட்-2026' கூட்டு ராணுவ பயிற்சி கஜகஸ்தானின் ஒஸ்கெமென் நகரில் நேற்று (செப்.28) தொடங்கியது. அக்.11-ம் தேதி வரை நடைபெறும் இப்பயிற்சியில் பங்கேற்பதற்காக, கார்வால் ரைபிள்ஸ் மற்றும் விமானப்படை உள்ளடங்கிய 60 வீரர்கள் கொண்ட இந்திய படைக்குழு கஜகஸ்தான் சென்றுள்ளது. ஐ.நா அவையின் அறிவுறுத்தலின்படி நகர்ப்புற பயங்கரவாத ஒழிப்பு, நவீன வான்வெளி தாக்குதல் உத்திகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்து இரு நாட்டு படைகளும் இணைந்து தீவிர பயிற்சி பெறவுள்ளன.