ரவி நதி நீரை நிறுத்த இந்தியா திட்டம்.. பாகிஸ்தானுக்கு அடுத்த செக்!

3641பார்த்தது
ரவி நதி நீரை நிறுத்த இந்தியா திட்டம்.. பாகிஸ்தானுக்கு அடுத்த செக்!
பாகிஸ்தானுக்கு செல்லும் ரவி நதியின் உபரி நீர் திறப்பை நிறுத்த இந்தியா முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாபூர் கண்டி அணை கட்டுமான பணிகள் நிறைவடைந்தவுடன், ரவி நதி நீர் பாகிஸ்தானுக்கு செல்வது தடுக்கப்படும் என ஜம்மு காஷ்மீர் நீர்வளத்துறை அமைச்சர் ஜாவேத் அகமது தெரிவித்துள்ளார். ஏற்கனவே பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை பாகிஸ்தானில் தண்ணீர் பஞ்சத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி