ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியா 2வது இடம்

5121பார்த்தது
ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியா 2வது இடம்
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வந்த நிலையில், எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையம் (சிஆர்இஏ) நேற்று (நவ.16) அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த அக்டோபர் மாதம் ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா ரூ.25,500 கோடி செலவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியா தொடர்ந்து 2வது இடத்தில் இருப்பதாகவும், சீனா முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி