இந்தியா பொருளாதாரம் வலுப்பெற்றது: முதலீடுகள் அதிகரிக்கும்

52பார்த்தது
இந்தியா பொருளாதாரம் வலுப்பெற்றது: முதலீடுகள் அதிகரிக்கும்
இந்தியாவில் சில்லறை பணவீக்க விகிதம் சமீப மாதங்களில் கணிசமாக குறைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளதன் காரணமாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் கூடும் என பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் இச்சூழலில், இந்தியாவின் பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பது திருப்தி அளிப்பதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.