மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர், இந்தியாவின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான சவாரி முன்பதிவு தளமான ‘பாரத் டாக்ஸி’யை அதிகாரப்பூர்வமாக அண்மையில் தொடங்கி வைத்தார். 2002-ம் ஆண்டு பல்மாநில கூட்டுறவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த தளம், ஓட்டுநர்களை உரிமையாளர்களாக கொண்டு சுரண்டலற்ற வர்த்தக முறையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. தரகு கட்டணம் மற்றும் நெரிசல் நேர கூடுதல் கட்டணம் இல்லாத இக்கொள்கை, லாபத்தை நேரடியாக ஓட்டுநர்களுக்கே கொண்டு சேர்க்கிறது.