மகளிர் கிரிக்கெட்டுக்கான முதல் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14 முதல் 28-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. டி20 சர்வதேச போட்டி வடிவில் நடைபெறும் இத்தொடரில்
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,
இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. மும்பை மற்றும் வதோதராவில் போட்டிகள் நடைபெற உள்ளன.