பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகளாவிய மென்பலக் குறியீடு 2026-ல், இந்தியா 48.0 புள்ளிகளுடன் உலக அளவில் 32-வது இடத்தைப் பெற்றுள்ளது. முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த குறியீடு, ஒரு நாடு தனது கலாச்சாரம், விழுமியங்கள், இராஜதந்திரம் மற்றும் புத்தாக்கம் மூலம் உலகில் ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பிடுகிறது.