ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்காவிடம் இந்தியா அனுமதி கேட்டதாக 'ப்ளூம்பெர்க்' நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா, ஈரான், வெனிசுலா ஆகிய நாடுகளிடம் எண்ணெய் இறக்குமதியை இந்தியா ஒரே நேரத்தில் நிறுத்தினால், உலகளாவிய சந்தை கடுமையாக பாதிக்கப்படும் என்று இந்தியா எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நகர்வு, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை பேணுவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது. மேலும், இது குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.