நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 301 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் வதேதராவில் இன்று (ஜன., 11) நடைபெறும் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.