சூப்பர் 8 சுற்றில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்

3739பார்த்தது
சூப்பர் 8 சுற்றில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று (பிப்., 22) நடைபெறுகிறது. இதில், இன்று இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை 35 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 21 ஆட்டங்களிலும், தென்ஆப்பிரிக்கா 13 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 20 ஓவர் உலகக் கோப்பையில் 7 முறை சந்தித்ததில் இந்தியா 5-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தொடர்புடைய செய்தி