மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று ( நவ.02 ) நவி மும்பையில் உள்ள மைதானத்தில் மோதுகின்றன. இந்நிலையில், இதற்கு முன் இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் 34 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்திய மகளிர் அணி 20 போட்டிகளிலும் தென் ஆப்ரிக்க மகளிர் அணி 13 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இன்றைய இறுதி போட்டியில் இரு அணிகளுமே முதன்முறையாக கோப்பையை வெல்ல அதிக முனைப்பு காட்டும்.