அமெரிக்கா, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாததால் இந்தியா மீது 25 சதவீத அபராத வரியும் விதிக்கப்பட்டது. இத்த நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், இந்த ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்தாகி, ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.