இலங்கையில் நடைபெற்ற முதல் பார்வையற்றோர் மகளிர் T20 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. இறுதிப்போட்டியில் நேபாளை இந்தியா எதிர்கொண்டது. முதலில் ஆடிய நேபாள் 20 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா வெறும் 12.1 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்தி வெற்றி பெற்றது. இந்த வரலாற்றுச் சாதனைக்கு இந்திய மகளிர் அணிக்கு நாடெங்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.