தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய செயற்குழு உறுப்பினர் மூர்த்தி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு ஏதுவாக பொதுமக்களும் கருத்து தெரிவிக்கலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.