இந்திய கிரிக்கெட் உலகில் அதிக நிகர சொத்து மதிப்புடன் திகழும் பணக்கார வீராங்கனைகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், சுமார் ரூ.40 கோடி முதல் ரூ.45 கோடி நிகர சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக, இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ரூ.32 கோடி முதல் ரூ.34 கோடி நிகர சொத்து மதிப்புடன் 2-வது இடத்தில் உள்ளார். அதே சமயம், தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ரூ.25 கோடி நிகர சொத்து மதிப்புடன் 3-வது இடத்தில் உள்ளார்.