குரோஷியா நாட்டின் தலைநகர் சாகிரேப்பில் உள்ள இந்திய தூதரகத்திற்குள் நேற்று (ஜன.22) அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த இந்திய தேசிய கொடியை அகற்றிவிட்டு தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் காலிஸ்தான் ஆதரவு கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்திய தூதரகம் சேதப்படுத்தப்பட்டதற்கு மத்திய அரசு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.