அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததை அடுத்து, இந்தியக் கொடியுடன் கூடிய 'ஜக் விக்ரம்' என்ற எல்பிஜி கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துள்ளது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு இந்த வழித்தடத்தை கடந்த முதல் இந்திய கப்பல் இதுவாகும். இந்த கப்பல் ஓமான் வளைகுடா வழியாக இந்தியா வந்துகொண்டிருக்கிறது. ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் மும்பை துறைமுகத்தை வந்தடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.