சவூதி அரேபியாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், முடிந்தவரை வெளியே நடமாடாமல் வீடுகளிலேயே இருக்குமாறும் இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், உதவி தேவைப்படும் இந்தியர்கள் 8002471234 என்ற உதவி எண்ணிலும், இந்திய வெளியுறவுத்துறையின் சமூக வலைதளக் கணக்குகள் மூலமாகவும் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.