இந்தியாவில் வெளிநாட்டவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரியாவை சேர்ந்த நபர் ஒருவர் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது இந்திய இளைஞர் அவரை நோக்கி ‘கொரோனா வைரஸ்’ என கத்தினார். அவர் சீனாவை சேர்ந்தவர் என நினைத்து அவ்வாறு கத்தினார். இது தொடர்பான வீடியோவை பாதிக்கப்பட்ட நபர், ”இந்தியாவில் ஒரு இனவாதியை நான் சந்தித்தபோது” என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.