"டிட்வா" புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா 10 டன் நிவாரண பொருள்களை இந்திய விமானப்படை விமானம் மூலம் அனுப்பியுள்ளது. புயலால் அங்கு 9.68 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 193 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று (நவ.30) இந்த பொருள்கள் கொழும்பு சென்றடைந்தன. மீட்புப் பணிகளில் இந்திய தேசியப் பேரிடர் மீட்புப் படையும், விமானப் படையும் இணைந்து இலங்கைக்கு உதவியாகச் செயல்படுகின்றன என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.