ஓமன் அருகே கடலில் மூழ்கிய இந்திய கப்பல்.. 14 பேர் மீட்பு

0பார்த்தது
ஓமன் அருகே கடலில் மூழ்கிய இந்திய கப்பல்.. 14 பேர் மீட்பு
ஓமன் கடற்பகுதிக்கு அருகே என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் ‘விராட் 1’ என்ற இந்திய கப்பல் நடுக்கடலில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து அமெரிக்க கடற்படை மற்றும் அருகில் சென்ற வணிகக் கப்பல்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டன. அவர்களின் விரைவான நடவடிக்கையால் கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி