வாரத்தின் 2-வது வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தீவிர பதற்றம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் பத்திர வருவாய் உயர்வு ஆகியவற்றின் எதிரொலியாக சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வீழ்ச்சி கண்டன. குறிப்பாக வங்கி மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.