ரஷ்யாவில் இந்திய மாணவர் உடல் அணையில் கண்டெடுப்பு

3506பார்த்தது
ரஷ்யாவில் இந்திய மாணவர் உடல் அணையில் கண்டெடுப்பு
ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படித்து வந்த ராஜஸ்தானை சேர்ந்த அஜித் சிங் சௌத்ரி (22) என்பவர் அக்., 19 அன்று காணாமல் போனார். 19 நாட்களுக்குப் பிறகு, அவரது உடல் ரஷ்யாவின் வெள்ளை நதிக்கு அருகிலுள்ள ஒரு அணையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது உடைகள், தொலைபேசி, காலணிகள் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி அஜித் சிங் குடும்பத்தினருக்கு மிகுந்த அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெளியுறவுத்துறை அஜித்தின் உடலை மீட்டுக் கொண்டுவர உதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி