இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. நேற்று (ஜூலை.07) நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 202 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 11.4 ஓவர்களிலேயே வெறும் 76 ரன்களில்
இந்தியா ஆல் அவுட்டானது. வைபவ் சூர்யவன்ஷி அடித்த 13 ரன்னே அதிகபட்ச ரன்னாக இருந்தது.