மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான சிக்கல்களை தவிர்க்க மேலைநாட்டு கழிப்பறைகளை விட இந்திய முறை கழிப்பறைகளே சிறந்தது. இந்திய முறையில் அமரும்போது ஏற்படும் 35 டிகிரி கோணத்திலான குந்து நிலை, குடலின் செயல்பாட்டை எளிதாக்கி கழிவுகளை முழுமையாக வெளியேற்ற உதவுகிறது. மேலைநாட்டு கழிப்பறையில் 90 டிகிரி கோணத்தில் அமர்வது மலக்குடலில் அழுத்தத்தை ஏற்படுத்தி நாளடைவில் மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கிறது.