வேலைக்காக போர்ச்சுக்கல் சென்ற இந்திய பெண்.. மதுபானக் கடையில் விற்பனை

0பார்த்தது
வேலைக்காக போர்ச்சுக்கல் சென்ற இந்திய பெண்.. மதுபானக் கடையில் விற்பனை
மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போர்ச்சுக்கலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 28 வயது நாக்பூர் பெண், அங்கு மதுபானக் கடையில் விற்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் ‘வி மைக்ரேட்’ என்ற நிறுவனத்தைத் தொடர்புகொண்ட அவர், வேலைக்காக ரூ.11 லட்சம் வழங்கியதாக கூறப்படுகிறது. போர்ச்சுக்கலில் இருந்து தப்பி இந்தியா திரும்பிய பெண், போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி