உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் , 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 15 மற்றும் 17 வயதுக்கு ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் 15 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பதக்க வேட்டையில்
இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இந்த பிரிவில்
இந்தியா 9 தங்கம், 6 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களை அறுவடை செய்தது. இதன் பெண்கள் பிரிவில் 7 தங்கம் உள்பட 14 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. ஆண்கள் பிரிவில் 2 தங்கம் உள்பட 13 பதக்கங்களை பெற்றது.