ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இந்திய வம்சாவளியினருடன் நடைபெற்ற சந்திப்பில்
பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, “இந்தியர்கள் பாலில் கரையும் சர்க்கரையைப் போன்றவர்கள்; அவர்கள் இருக்கும் இடமெல்லாம் இனிமையையும் அன்பையும் பரப்புகிறார்கள். அன்பின் சாரத்தை உலகம் முழுவதும் இந்தியர்கள் கொண்டு செல்கின்றனர். உங்கள் வீட்டில் இருக்கும் பால் ஆஸ்திரேலியாவுடையதாக இருக்கலாம்; ஆனால் அதில் தயாரிக்கப்படும் தேநீர் இந்திய பாணியிலானதாகவே இருக்கும்” என்று கூறினார்.