இந்தியர்கள் பலர் மியான்மர் வழியாக சட்ட விரோதமாக தாய்லாந்துக்குள் நுழைந்து சைபர் மோசடி நிறுவனங்களில்
வேலை செய்து வந்துள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இந்திய தூதரகம் முயற்சியால் மீட்கப்பட்டனர். வெளிநாட்டில்
வேலை வாங்கித் தருவதாகக் கூறி தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள், கட்டாயப்படுத்தப்பட்டு சைபர் மோசடிகளில் ஈடுபடுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.