பணியாளர்களை கையாள்வதில் உள்ள சிக்கலால் கடந்த 4 நாட்களாக கடுமையாக இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து, அந்நிறுவனம் X தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இண்டிகோ விமான சேவைகள் வரும் டிச.10-ம் தேதிக்குள் வழக்கம் போல் இயங்க தொடங்கும் என்றும், சேவைகள் முழுமையாக சீராக பிப்ரவரி 10 வரை ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளது.