நாடு முழுவதும் இண்டிகோ விமானங்களின் சேவை 7வது நாளாக இன்று (டிச.8) பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களில் நாடு முழுவதும் சுமார் 5,000 க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த நில நாட்களாகவே சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருவதால், பயணிகளுக்கு இதுவரை ரூ.610 கோடியை இண்டிகோ நிறுவனம் திருப்பி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.