இண்டிகோ விமான நிறுவனம் தனது சர்வதேச விமான சேவைகளைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. குறிப்பாக, ஈரான் வான்பரப்பை பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு, ஜார்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் அசர்பைஜான் ஆகிய 4 நாடுகளுக்கான சேவைகள் வரும் ஜன.28-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.