இண்டிகோ விமான சேவை ரத்து.. முழு கட்டணமும் ரிட்டன்

4053பார்த்தது
ரத்து செய்யப்பட்ட விமான சேவைகளுக்குப் பதில் முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இருந்து இன்று (டிச.5) நள்ளிரவு வரை புறப்பட வேண்டிய அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஒரே நாளில் 550 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், அவதிபட்ட பயணிகளின் முழு கட்டணத்தை திருப்பிக் கொடுப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று இரவு அல்லது நாளைக்குள் விமான சேவைகள் சீராகும் என உறுதியளித்துள்ளது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி