நாடு முழுவதும் கடந்த ஒரு வார காலமாக இண்டிகோ விமான சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், விமானங்கள் ரத்தானதால் டிக்கெட் எடுத்திருந்த பயணிகளுக்கு ரூ.827 கோடி பணத்தை திருப்பி கொடுத்துள்ளதாக இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் இன்று 1800 இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.