மேற்கு ஆசிய
போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், இந்தியாவில் கடந்த 2 வாரங்களில் 5-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்விலும் கலால் வரியை குறைத்ததால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த தொடர் விலை உயர்வை சுட்டிக்காட்டி, "பணவீக்க மனிதர் மோடி மீண்டும் தாக்கியுள்ளார்" என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.