தமிழகத்தில் வெயில் அதிகரிப்பால் பரவி வரும் இன்ப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பைத் தவிர்க்க, சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் எளிதில் பரவக்கூடும் என்பதால் பாதுகாப்பு கருதி வீட்டிற்குள்ளும் முகக்கவசம் அணியுமாறு பொது சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் சுய மருத்துவத்தைத் தவிர்த்து, போதிய நீர்ச்சத்து மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.