தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் நாளை (மே 21) அதிமுகவின் சி.வி.சண்முகம் தரப்பு இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் உள்ளிட்ட 10 பேர் அமைச்சர்களாக உள்ள நிலையில், மேலும் 25 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதில் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் மற்றும் தவெகவின் 10-க்கும் மேற்பட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. ஆனால் சி.வி.சண்முகம் தரப்பினர் இணைக்கப்படுகிறார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.