சென்னையில் இன்று (நவ.08) திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற 'திமுக 75 அறிவு திருவிழா'வில் மேடை நாடகம் ஒன்றில் மறைமுகமாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை தாக்கி பேசினார். அரங்கில் முதல்வர் அமர்ந்திருக்க, நாடகம் போட்டவர்கள், "நாற்காலிக்கு அடியில் புகுந்து எப்படியோ முதல்வர் ஆகிவிட்டேன்" என மோடி மற்றும் அமித் ஷாவுடன் EPS பேசுவது போன்று நடித்துக்காட்டினார். இதனை கண்ட அனைவரும் சிரித்தனர்.