சிறார்களின் ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், இன்ஸ்டாகிராமில் உள்ள ஏஐ சாட்போட்டுடன் தற்கொலை தொடர்பான உரையாடல்கள் நடைபெறும்போது, அவர்களின் பெற்றோருக்கு எச்சரிக்கை (Alert) அனுப்பும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் உருவாக்கி வருகிறது. முதற்கட்டமாக
அமெரிக்கா, ஐரோப்பா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகும் இந்த பாதுகாப்பு வசதி, இந்த ஆண்டின் இறுதிக்குள் உலகளவில் விரிவுபடுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.