சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு இடத்தில் இன்று (அக்.21) காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த நினைவு இடத்தில் முதலமைச்சர்
விஜய் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்திற்குள் சென்ற அவர், வீரமரணம் அடைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5.96 கோடி மதிப்பில் காப்பீட்டு தொகை வழங்கினார். தொடர்ந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதாக நம்பிக்கை அளித்தார்.