நேபாளம்-இந்தியா எல்லையில் தீவிர சோதனை

5612பார்த்தது
நேபாளம்-இந்தியா எல்லையில் தீவிர சோதனை
பாகிஸ்தானுக்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருவதால், நேபாள, இந்திய எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு பாதுகாப்பு குறைபாடுகளுக்கும் இடம்கொடுக்காத வகையில், முன்னெச்சரிக்கையாக இரு நாடுகளின் எல்லையில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. எல்லை வழியாக பயணிக்கும் நபர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து, உடமைகளை சோதனைக்கு உட்படுத்திய பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
Job Suitcase

Jobs near you