நீருக்கடியிலும் நிலத்திலும் வாழக்கூடிய பாலூட்டி உயிரினமான 'சீல்' விலங்குகள், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா போன்ற குளிர் பிரதேசங்களில் வசிக்கும் திறன் கொண்டவை. இவற்றின் உடலிலுள்ள கொழுப்பு படலம் குளிரில் இருந்து இவற்றை பாதுகாப்பதுடன், நீரினடியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மூச்சடக்கி இருக்கும் ஆற்றலையும் வழங்குகிறது. நிலத்தில் மெதுவாக நகர்ந்தாலும் நீரில் அதிவேகமாக நீந்தக்கூடிய இவை, மீன்களின் அதிர்வுகளை தங்களின் மீசையின் மூலம் உணர்ந்து மிக துல்லியமாக வேட்டையாடும் திறன் பெற்றவை.