தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் 17ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்புகள் வெளியாகும். அதன்படி, மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் புதிய பயனாளிகளை இணைப்பது மற்றும் தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த திட்டத்தில் 1.30 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.