சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று அரசின் இடைக்கால பட்ஜெட் மற்றும் இடைக்கால வேளாண்மை பட்ஜெட் ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். வரும் 20ம் தேதி பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதில் அளிக்கும் நிதியமைச்சர், கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.