சர்வதேச சந்தையில் தங்கம் இன்று 28 டாலர்கள் குறைந்துள்ளது. அதன்படி, 1 அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் $28.35 (இந்திய மதிப்பில் ரூ.2,716.95) குறைந்து $4,297.36 ஆகவும், வெள்ளி விலை $0.53 குறைந்து $63.26-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,125-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,000-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக தங்கம், வெள்ளி மீதான முதலீடு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.