உலகிலுள்ள சுமார் 7,000 மொழிகளின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில், ஆண்டுதோறும் பிப்.21-ம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. 1999-ல் யுனெஸ்கோ அறிவித்த இத்தினம், தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்துவதுடன், அழிந்து வரும் மொழிகளை மீட்டெடுக்கவும் வழிவகை செய்கிறது. இளைய தலைமுறையினரிடம் தாய்மொழியின் சிறப்பை கொண்டு சேர்ப்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.