திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்த சுஜாதா நாதன் (50) என்பவர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பி, தனது வங்கி கணக்கில் ரூ.40 லட்சத்து 32 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால், கூறியபடி இரட்டிப்பு தொகை வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஆவடி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.