ஐபிஎல் 19வது சீசன் கிரிக்கெட் தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.12) நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. மும்பை மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது.